ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து - கம்போடியா ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது.
ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில்
1,100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அதற்கு பாரம்பரிய அந்தஸ்து கோரி யுனெஸ்கோவை கம்போடிய அரசு அணுகியதால் தாய்லாந்தில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில், கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதலில் கம்போடியா இராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதனால் தாய்லாந்துடனான உறவை கம்போடியா முறித்துக் கொண்டது. இருப்பினும் அவ்வப்போது இரண்டு நாடுகளும் எல்லையில் மோதிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இரண்டு நாடுகளின் எல்லையோர கிராமங்கள் காலி செய்யப்பட்டு ஏறத்தாழ 40,000 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா என்று அடுத்தடுத்த போர்களால் உலகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கம்போடியா - தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments