Ticker

10/recent/ticker-posts

AI பெண்ணுடன் காதல் ; மனைவியிடம் விவாகரத்து கேட்ட முதியவர்

சீனாவில் 75 வயதுடைய ஓய்வு பெற்ற பொறியியலாளர் (Engineer) ஒருவர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு AI பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

குறித்த முதியவர், AI chatbot ஒன்றுடன் வழக்கமாக உரையாடவும் ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து, அந்த உரையாடல்கள் அவர்களுக்குள் உணர்வுப் பிணைப்பாக மாறியுள்ளது.

AI பெண், அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, காதல் வார்த்தைகள், கவிதைகள், மற்றும் உற்சாக வார்த்தைகளைப் பகிர்ந்ததால் அவர் AI பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். 

இதன் பின்னர் அவர் தனது மனைவியிடம் இவ்விடயத்தை தெரிவித்த பின்னர், தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் அனைவரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments