வைத்தியசாலையொன்றில் தனது தாயை தாக்கிய வைத்தியசாலை வரவேற்பாளரை மகன் நையப்புடைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வைத்தியசாலைக்கு தனது தாயுடன் சென்ற மகன், அங்கு வரவேற்பாளருடன் முரண்பட்ட நிலையில் தாயார் மகனை வெளியே அனுப்பிவிடுகின்றார்.
இந்நிலையில் வரவேற்பறையில் இருந்த பெண் திட்டிக் கொண்டே வெளியே வந்து அங்கு காத்திருத தாய் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைகின்றார்.
யுவதியின் செயலை அங்கிருந்தவர்கள் அதிச்சியில் பார்த்து கொண்டிருக்க, தனது தாயை வரவேற்பாளரான யுவதி தாக்கியதை கண்ட மகன் மீண்டும் உள்ளே வந்து அப்பெண்ணை நையப் புடைத்துள்ளார்.
அதன் பின்னர், அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை வெளியே அனுப்பி விடுகின்றனர். குறித்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தெரிய வராத நிலையில், வயதான பெண்ணை தாக்கிய குறித்த யுவதியை சமூக வலைத்தளவாசிகள் திட்டித் தீர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments