தற்போது இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
5400 க்கும் மேற்பட்ட இணைய வழிக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் கடவுச் சொற்களைப் பகிர வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.மேலும், சமூக ஊடகங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கும் படியும் வலியுறுத்தியுள்ளது. தெரியாத இணைப்புகளை அழுத்தி உட்செல்ல வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) குறிப்பிட்டுள்ளது.
0 Comments