தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இவருடைய இல்லத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று (27) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் சோதனையின் பின்னர் அது போலியான மிரட்டல் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீலாங்கரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments