திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் வனப் பகுதியில் தேன் எடுப்பதற்கு சென்றவர் மீது யானை தாக்கியதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இத்துயரச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் காட்டுப் பகுதிக்குத் தேன் எடுப்பதற்காக 03 பேர் சென்றுள்ளதுடன் யானையொன்று குறித்த நபர்களைத் தாக்க முற்பட்டபோது மூவரும் வெவ்வேறாகப் பிரிந்து ஓடினர் என்றும், அவ்வேளை ஒருவரை யானை தாக்கியது எனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலமாக தெரிய வந்துள்ளது.
யானையின் தாக்குதலில் ஹெல்லென - மித்தெனிய பகுதியைச் சேர்ந்த ஜீ.எம்.ரஞ்சித் எனும் 54 வயது நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் பிரேதம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments