பிரபல பாடகர் பாத்தியா ஜெயக்கொடி மற்றும் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகளை கைது செய்வதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவசர விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
'வேரஸ் கங்கா' திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி கொள்முதல் செயன்முறையை மேற்கொள்ளாமல் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் குறித்த கைது இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அரசாங்கத்திற்கு ரூபாய் 27.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாத்தியா நடாத்தும் “ஷோட்டவுட் என்டர்டெயின்மென்ட்” நிறுவனத்தின் மீது ஏற்கனவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முறைப்பாடுகளை பெற்றிருந்தாலும், அவை குறித்து இதுவரையில் எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை மறைத்த பாதுகாப்பு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments