Ticker

10/recent/ticker-posts

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் மரணம்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரான பேராசிரியர் செல்வராசா இன்று) (27) காலமானார். 

மட்டக்களப்பின் முனைக்காடு எனும் கிராமத்தில் பிறந்தவரான இவர் ஆசிரியர், அதிபர் (மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம்), விரிவுரையாளர், துறைத் தலைவர், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி போன்ற பதவிகளை வகித்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் தனது பணியில் உயர்ந்து நின்றவர். 

கிழக்குக் பல்கலைக் கழகம் தவிர்ந்த ஏனைய சில பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார். இவ்"வாறு இளமைக் காலத்திலிருந்து கண்ணிறைந்த சேவையாய் கல்விப் பணி என் பணி" என்று கிழக்கு மண் கல்வியில் வளர்வதற்கு பெரும்பாடுபட்டு உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.


Post a Comment

0 Comments