நாஸ்கார் சாரதி கிரெக் பிஃபிள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஒரு தனியார் பயணிகள் விமான விபத்தில் சிக்கி உடல் கருகி மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த துயரச் சம்பவம் நடந்தபோது, ​​கிரெக் பிஃபிள், அவருடைய மனைவி கிறிஸ்டினா க்ரோசு, மகள் எம்மா மற்றும் மகன் ரைடர் ஆகியோர் குறித்த பயணிகள் விமானத்தில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிஃபிள் குடும்ப நண்பர் கிளீட்டஸ் மெக்ஃபார்லேண்டின் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இவ்விபத்தில் நால்வரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.