தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (04) மும்முரமாக நடை பெற்று வருகின்றது.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முதலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டன. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காலை 10. 00 மணி நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான TVK முன்னிலைப் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டவர்கள் முன்னிலைப் வகிக்கின்றனர்.
அதேநேரம், முதல்வரான மு.க.ஸ்டாலின் மற்றும் 31 அமைச்சர்கள் ஆரம்ப கட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர். குறித்த எதிர்பாராத திருப்பம் DMK வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

0 Comments