தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் 01 வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தாய்லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாய்லாந்தின் மிகப் பெரிய பணக்காரரும் அரசியல் கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்த.நாட்டின் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகின்றார்.
2001 - 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007 ஆம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் தொடங்கினார்.
ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.
இதனையடுத்து 2009 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மொண்டெனேகுரோவுக்கு தப்பிச் சென்ற ஷினவத்ரா சுமார் 15 வருடங்கள் கழித்து கடந்த 2023 ஆம் ஆண்டு தாய்லாந்து வந்தார்.
பியூ தாய் கட்சி ஆட்சியிலிருந்த நிலையில் அவர் மீதான வழக்கில் அவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இச்சிறை தண்டனை தாய்லாந்து மன்னரால் 01 வருடமாக குறைக்கப்பட்டது.
கால் நூற்றாண்டாக தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தி வரும் கோடீஸ்வரரான தக்சின் ஒரு சில மணி நேரங்கள் மாத்திரமே சிறைச்சாலையில் இருந்த நிலையில் வைத்திய சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார்.
பின்னர், 06 மாதங்களில் விஷேட பிணையில் வெளியே வந்த தக்சின் ஷினவத்ரா தாய்லாந்து அரசியலில் மீண்டும் செல்வாக்கு செலுத்தினார்.
இந்த நிலையில் செப்டம்பர் 04 ஆம் திகதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தாய்லாந்து பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வியடைந்தது.
இதனையடுத்து அவருக்கெதிரான விசாரணையின் போது ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்தபடி தண்டனையை அனுபவித்ததால் அது தண்டனையாக கருதப்படாமல் ஒரு வருட தண்டனையை விதிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
0 Comments