Ticker

10/recent/ticker-posts

வினாத்தாளை கேட்டு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் அதிரடியாக கைது.

இந்தியாவின் கடலூர் மாவட்டம், வேப்பூர் பிரதேசத்தை அடுத்த கண்டப்பன்குறிச்சியிலுள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பொயனப்பாடி கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் மணிகண்டன் (24) என்பவர் பி.எட். படித்து வருகிறார். 

இவர் 03 மாத பயிற்சிக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வாரமாக பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று காலை 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பிளஸ் - 2 மாணவர்கள் 05 பேர் அறைக்கதவு மற்றும் ஜன்னலை தட்டி வினாத்தாள் கேட்டு மணிகண்டனிடம் ரகளையில் ஈடுபட்டனர். 

ஆனால், தேர்வு நடை பெற்றுக் கொண்டிருந்தாமையால் மாணவர்களை அவர் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்பறைக்குள் புகுந்து பயிற்சி ஆசிரியர் மணிகண்டனை தாக்கினர். 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலுள்ள வகுப்பறையில் இருந்த மற்றொரு பயிற்சி ஆசிரியையான மே.மாத்தூர் கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா ஸ்ரீநிதி (22) என்பவர் ஓடிச் சென்று அவர்களை தடுக்க முயன்றார். ஆனால், இவரையும் மாணவர்கள் தாக்கினர்.

தகவலறிந்து வந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவா்களை தடுத்து நிறுத்தி வகுப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய 05 மாணவர்களையும் கைது செய்து வேப்பூர் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Post a Comment

0 Comments