நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி என்பவர்தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2025 மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் தேசிய தேங்காய் அறுவடை 500 மில்லியனைத் தாண்டுமென்றும் தென்னை ஆராய்ச்சி நிலையம் கணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையுமென்று தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 Comments