திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு சரியில்லை, வரதட்சணை குறைவாக உள்ளது போன்ற சில காரணங்களால் திருமணம் கடைசி நேரத்தில் நின்று விடும் சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன. ஆனால், டெல்லியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், DJ குழுவினரால் போடப்பட்ட பாடலால் திருமணமொன்று நின்றுள்ளது.
ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஏ தில் ஹை முஷ்கில்' என்ற படத்தில் வரும் 'சன்னா மெரேயா' என்ற பாடல் காதல் முறிவு சார்ந்த பாடலாகும்.
டெல்லியில் நடைபெற்ற திருமணமொன்றில், DJ குழுவினர் இப்பாடலை இசைத்த போது, மேடையில் இருந்த மணமகனுக்கு தன்னுடைய முன்னாள் காதலியின் நினைவு வந்துள்ளது.
இதனையடுத்து, மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டு உடனடியாக மேடையிலிருந்து கிளம்பியுள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில், Gaurav Kumar Goyal என்பவர் பகிர்ந்துள்ள இப்பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே, மணமகன் தனது உண்மையான உணர்வுகளை உணர உதவியதற்காக பாடலை இசைத்த DJவிற்கு பலரும் அப்பதிவில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
0 Comments