Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலைகளில் மாற்றம். வௌியான அறிவிப்பு.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைவாக, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 293 ரூபாவாகும். 

361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய புதிய விலை 341 ரூபாவாகும். 

இதேவேளை 286 ரூபாவாக காணப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 274 ரூபாவாகும். 

அத்தோடு, 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 325 ரூபாவாகும். 

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 178 ரூபாவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments