Ticker

6/recent/ticker-posts

மே தின ஊர்வலத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் நினைவு நாள் நிகழ்வு இன்று.

32 ஆண்டுகளுக்கு முன்பு மே தின ஊர்வலத்தின் போது இடம் பெற்ற குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை (01) நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

 

கொழும்பிலுள்ள ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


மே 1, 1993 அன்று, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஏற்பாடு செய்த மே தின அணி வகுப்பில் பங்கேற்றிருந்தார். ஊர்வலம் கொழும்பிலுள்ள ஆமர் வீதியை அடைந்த போது, ​​விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியால் வெடிக்கப்பட்ட குண்டு வெடிப்பில் ரணசிங்க பிரேமதாச உட்பட 23 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments