ஜம்மு - காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானில் வசிக்கும் லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் லஷ்கர்-இ-தொய்பா தலைவரான ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் 04 மடங்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் மக்கள் தொகை அதிகமுள்ள குடியிருப்புப் பகுதியான மொஹல்லா ஜோஹர் டவுனில் அமைந்துள்ள ஹபீஸ் சயீத்தின் வீடு ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலையின் கீழ் வந்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் இயக்கத்தினர் ஆகியோர் இணைந்து ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பை மேற்பார்வையிடுகின்றனர். அவர் தங்கியிருக்கும் வளாகத்தை கண்காணிக்க ட்ரோன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 04 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள வீதிகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments