இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அந்நாட்டின் அரசு கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளது.
ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய காட்டுத் தீ காரணமாக, ஆயிரக்கணக்கான குடிமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.
கடும் வெயில் மற்றும் வேகமாக வீசுகின்ற வறண்ட காற்று காரணமாக, தீ கட்டுக்கடுங்காமல் அதி வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments