Ticker

10/recent/ticker-posts

79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்; இணையத்தில் வைரல்

 பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் காப்பகத்தில் இருந்த போது தொடங்கிய நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்த யம்பவம் நடந்தேறியுள்ளது.


கேரளா திருச்சூர் பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 79 ஆகும். இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனாவுடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது.

இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதற்காக சமூக நீதித்துறையிடம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த நிலையில் சமூக நீதித்துறை அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற ஏற்பாடு செய்தது.

இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதியோர் இல்லத்தில் நடந்த இந்த காதல் திருமணம் காதலிப்பதற்கு வயது தடை இல்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.   


Post a Comment

0 Comments