நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அழைப்பு மையங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக அழைப்பு அளவை எதிர்கொள்வதனால், மின்வெட்டுகளைப் முறைப்பாடு செய்வதற்கு மின்சார சபையின் டிஜிட்டல் தளங்களை (CEBCare app) பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை (CEB) இன்று (27) நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.
கடுமையான வானிலையானது பரவலான செயலிழப்புகளைத் தூண்டியுள்ளது, இதன் விளைவாக வாடிக்கையாளர் அழைப்புகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இதன் விளைவாக பதிலளிக்கும் நேரம் குறைந்துள்ளதென்று CEB ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இச்செயல்முறையை விரைவுபடுத்த CEBCare மொபைல் செயலி, CEBCare வலை போர்டல், 1987 SMS சேவை அல்லது தானியங்கி IVR அமைப்புகளின் மூலமாக புகார்களைச் சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மிகக் குறுகிய காலத்தில் மின்சாரத்தை மீட்டெடுக்க குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் வானிலை தொடர்பான நெருக்கடியின் போது ஒத்துழைத்த நுகர்வோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் CEB பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

0 Comments