Ticker

10/recent/ticker-posts

தலைக்கவசம் அணியவில்லை: 20 இலட்சம் ரூபாய் அபராதத்தை கண்டு நடுங்கிய சாரதி.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், தலைக்கவசம் அணியாதது மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத உந்துருளி ஓட்டுநர் ஒருவருக்கு போக்குவரத்து காவல்துறையினரால், (இந்திய மதிப்பில்) 20 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 உத்திர பிரதேசத்தின் முசாபர் நகரைச் சேர்ந்தவர் அன்மோல் சிங் என்ற நபர். கடந்த 04 ஆம் திகதி அங்குள்ள புதிய மண்டி பகுதிக்கு, உந்துருளியில் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளார்.

 மேலும், உந்துருளிக்கான உரிய ஆவணங்களும் அவரிடம் இருக்கவில்லை. 

இதன் காரணமாக உந்துருளியை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்து, அதற்கான பற்றுச்சீட்டை அவரிடம் வழங்கியுள்ளனர். 

 அதனை வாங்கி பார்த்த அன்மோல் சிங் பதறிப் போனார். அவர் ஓட்டிச் சென்ற உந்துருளியின் மதிப்பே, 1 இலட்சம் ரூபாய் எனும் நிலையில், பற்றுச்சீட்டில் 20 இலட்சத்து, 74,000 ரூபாய் அபராதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 உடனடியாக அவர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது குறித்து முசாபர் நகர் போக்குவரத்து அதிகாரி கருத்து தெரிவிக்கையில், 

 "அபராதம் விதித்த காவல்துறை அதிகாரியின் தவறால் இந்த பிழை ஏற்பட்டது என்று குறிப்பிட்ட்டுள்ளார். இந்த வழக்கில் மோட்டார் வாகனச் சட்டத்தின், 207 பிரிவு பயன்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், குறித்த காவல்துறை அதிகாரி, 207 க்குப் பின்னர் 'எம்.வி., ஆக்ட்' என்று குறிப்பிட மறந்து விட்டார். 

 இதனால், '207' மற்றும் இந்தப் பிரிவின் குறைந்தபட்ச அபராதத் தொகையான 4,000 ரூபாய் சேர்ந்து, 20,74,000 ஆகி விட்டது. அது தற்போது திருத்தப்பட்டு விட்டது" என்று மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments