Ticker

10/recent/ticker-posts

வரவு செலவு திட்டம் -2026 : விசேட முன்மொழிவுகள்

 2026 ஆம் ஆண்டுக்கான விசேட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பின்வருமாறு:



  • 2026 மார்ச் மாதம் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம் ஆகும்.


  • ஹிங்குராக்கொட, சீகிரியா மற்றும் திருகோணமலை ஆகியவற்றிலுள்ள உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்தவும், யாழ்ப்பாண விமான நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் ரூபாய் 1,000 மில்லியன்


  • அனைத்து அரசு கொடுப்பனவுகளும் டிஜிட்டல் கட்டண முறைமையின் கீழ் கொண்டு வரப்படும். இணையவழி கொடுப்பனவுகளுக்கு எந்தவொரு சேவை கட்டணங்களும் விதிக்கப்படாது.


  • டிஜிட்டல் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கான முதலீட்டு வரி 05 வருடங்களுக்கு நீக்கம்


  • நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களை 60 : 40 விகிதத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை


  • முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு மெய்நிகர் பொருளாதார வலயம் நிறுவப்படும்.


  • முதலீட்டுச் சபையின் கீழ் திகன மற்றும் நுவரெலியாவில் 02 தகவல் தொழில்நுட்ப வலயங்கள்


  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கான Broadband internet வவுச்சர் அட்டைகள் வழங்குத்தல்


  • திறந்தவெளி சிறைச்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் கைதிகளை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட சிறைச்சாலை நடவடிக்கைகளை விரைவுபடுத்த ரூபாய் 2,000 மில்லியன்


  • நாடு முழுவதும் 100 புதிய தொலைபேசி கோபுரங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை,,,


  • 2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதித் திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு 


  • சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடாத்த ஒரு நிபுணர் குழுவை நியமிக்க திட்டம் 

 

  • இவ்வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் இலங்கை வாகன இறக்குமதிக்காக 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு.


  • இந்த வருடத்தில் 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளது. 


  • 2032 ஆம் வருடம் தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு.


  • அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக தேசிய உற்பத்தியை 20 சதவீதமாக முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை.


  • நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இலிருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை.


  • பணவீக்கத்தை 05 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


  • காணி தகவல் உள்ளிட்ட மத்திய டிஜிட்டல் சேவைக்காக 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.


  • கைத்தொழில் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபாய்.


  • சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் வழங்க 5900 மில்லியன் ரூபாய்.


  • பொருளாதார நெருக்கடியில் வியாபாரிகளுக்கு 15 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்காக 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


  • 2026 ஆம் ஆண்டு பல்வேறு கடன்களுக்காக 80,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.


  • விவசாய அபிவிருத்திக்கு 1700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


  • நீர்நிலை சுற்றுலா மேம்பாட்டுக்கு 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...


  • இவ்வருடம் பட்ஜெட் பற்றாக்குறை 5.2% ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு 


  • வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் வதிவிட விசா முறைமை அறிமுகம். 


  • குருநாகலிலும் காலியிலும் 02 தொழிநுட்ப நிறுவனங்கள் கட்டப்பட்டன, ஆனால், அவை இப்போது கைவிடப்பட்டுள்ளன. அவற்றின் நிலுவையிலுள்ள கடன்கள் தீர்க்கப்படும், மேலும், தனியார் துறை முதலீட்டிற்காக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும்.


  • கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம்


  • அரசாங்கம் விரைவில் மின்னணு கொள்முதல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டம்



  • 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடனை 87 சதவீதமாக பராமரிக்க நம்பிக்கை 


  • வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 07 பில்லியன் அமெரிக்க டொலர் எனும் நிலைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு


  • அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பு


  • அரச ஊழியர்களின் சம்பளத்தை 03 கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை 


  • அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
  • அரச சொத்து முகாமைத்துவச் சட்டம் 2026 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்படும்.


  • மக்களுக்கு எதிராக யாரேனும் தவறிழைத்தால் அவர்களுக்கு சட்டத்துக்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.


  • 2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு 


  • சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடாத்த ஒரு நிபுணர் குழுவை நியமிக்க திட்டம் 

 

  • இவ்வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் இலங்கை வாகன இறக்குமதிக்காக 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு 

  • இந்த ஆண்டில் 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளது. 


  • 2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதமாக குறைப்பதற்கு எதிர்பார்ப்பு.


  • 2025 ஆம் வருடத்தின் இறுதிக்குள் இலங்கையின் நெருக்கடிக்கு முந்தைய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இது முந்தைய கணிப்புகளை விட 04 வருடங்களுக்கு முன்னதாகவே இருக்கும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு 



  • வெளிநாட்டுக் கடன் சேவை கடந்த ஆண்டை விட 760 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு.

Post a Comment

0 Comments