திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்தில் கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் வான் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகி கிண்ணியா தளவைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிகமான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments