கம்போடியா - தாய்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தாய்லாந்து இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொடர்ந்து 02 நாடுகளும் தங்கள் தூதுவர்களை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், நேற்று எல்லையில் 02 நாடுகளும் பீரங்கி மற்றும் ரொக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக் கொண்டதை அடுத்து தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடாத்தியது.
தாய்லாந்து சுகாதார அமைச்சு, ஒரு வீரர் மற்றும் குழந்தைகளுட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்போடியா தரப்பில் குறைந்தது 04 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கம்போடியாவுடன் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் தாய்லாந்து தனது எல்லைப் பகுதிகளில் இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments