Ticker

10/recent/ticker-posts

அரசாங்க நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற நடவடிக்கை

 அரசாங்க நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. செயிரி வாரம் என்ற இத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களிலுள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இத்திதிட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதேவேளை க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.


Post a Comment

0 Comments