ஜனாதிபதி அடுத்த ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை வழங்குவாரென்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
25 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேருந்து நிலையங்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்நிறுவனங்கள் மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் திறமையான நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments