Ticker

10/recent/ticker-posts

பொருட்களின் விலைகளை குறைக்கும் ட்ரம்ப்.

மாட்டிறைச்சி, கோப்பி, பழங்களின் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

நுகர்வோர் மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை ட்ரம்ப் நீக்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான பிரேஸில் மீதான வரிகளே இந்த விலை ஒரு காரணம் என்று கூறப்பட்டது. 

ஈக்வடோர், குவாத்தமாலா, எல் சால்வடோர், ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளுடன் அண்மையில் ஒப்பந்தங்களை அமெரிக்கா எட்டியதைத் தொடர்ந்தே ட்ரம்ப் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தங்கள் அந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை குறைக்க உதவுகின்றன.



Post a Comment

0 Comments