Ticker

10/recent/ticker-posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு விசாரணை இன்று

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவருடைய மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இம்முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டது.

பின்னர் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 03 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கினை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் (இன்று) நிறைவு செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments