Ticker

10/recent/ticker-posts

புதுமணப் பெண்ணின் கைவரிசை: திருமணமாகி இரு தினங்களில் கணவனுக்கு காத்திருந்த பேரிடி

திருருச்செந்தூரில் திருமணம் முடிந்து 02 நாட்களின் பின்னர் தங்கத் தாலி மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவான இளம் பெண் மீது பொலிஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் என்று கூறிய ஒருவரை திருமணம் செய்துள்ளார். 

அத்தோடு, தான் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு குறித்த இளம் பெண்ணை அழைத்து வந்துள்ளார்.

திருமணமாகி இரண்டு தினங்களின் பின்னர் கணவன் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த பணம், புதிதாக வாங்கிய துணிகளையும் காணவில்லை.

அப்போதுதான் மனைவி கட்டிய தாலி, வீட்டிலிருந்த பணம் மற்றும் துணிகளுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்துள்ளது. மேலும், குறித்த இளைஞரின் செல்போனில் திருமணக் கோலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அழித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருச்செந்தூர் தாலுகா பொலிஸ் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். அதன் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments