Ticker

10/recent/ticker-posts

கிண்ணியாவில் புதிய ஆரோக்கிய உணவகம் திறப்பு.

கிண்ணியா மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதிய ஆரோக்கிய உணவகம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச செயலகத்தின் முழுமையான அனுசரணையில் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் போஷாக்கு நிறைந்த உணவுகளை வழங்குதல், வறுமை நிலையிலுள்ள மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் உன்னத திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் குறித்த உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதியமைச்சர் கௌரவ. அருண் ஹேமச்சந்திரா அவர்கள் குறித்த உணவகத்தை திறந்து வைத்தார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் W. G. H. M. ஹேமந்தகுமார அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் நகர சபை தவிசாளர், நகர சபை செயலாளர், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சமூர்த்தி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தாக்கது.


Post a Comment

0 Comments