Ticker

10/recent/ticker-posts

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கான சிங்கள டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழித்துறையினால் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கான சிங்கள டிப்ளோமா கற்கைநெறி – செப்டம்பர் 2026 இல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சிங்கள மொழித்திறனை மேம்படுத்த விரும்புவோருக்காக நடத்தப்படும் இக்கற்கைநெறி, விசேடமாக தொழில் மற்றும் நடைமுறை தேவைகளை முன்னிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GCE (A/L) சித்தி அல்லது அதற்கு சமமான தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும். கற்கைநெறிக் காலம் 01 வருடமாகும்.

விரிவுரைகள் வார இறுதி நாட்களில் நேரடியாகவும், நிகழ்நிலையக (Online) முறையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் 2026 மே 17 முதல் ஜூலை 31 வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்கைநெறிக்கான கட்டணம் ரூ.77,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பதிவுக் கட்டணமாக ரூ.2,000 செலுத்த வேண்டும். மேலும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளாக தலா ரூ.25,000 வீதம் கட்டணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு களனி பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறையை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments