Ticker

10/recent/ticker-posts

ஈரானில் நடைபெற்ற மனதை நெகிழ வைத்த திருமணம்

 ஈரானில் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த மருத்துவத் தம்பதியினர், தங்களுடைய திருமண உடன்படிக்கையின் (மஹர்) மூலமாக உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். 



முஸ்லிம்கள் தமது திருமணத்தின் போது, மணமகன் மணமகளுக்கு 'மஹர்' வழங்குவது கட்டாயமானதாகும். அவ்வாறு மணமகன் மணமகளுக்கு வழங்க வேண்டிய 'மஹர் (Hag Mehr) தொகையாக, ஏழை மற்றும் தேவையுடைய 313 ஏழை எளிய மக்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை செய்து தர வேண்டும் என்ற உன்னதமான கோரிக்கையை மணமகள் முன்வைத்துள்ளார். 

தனது மனைவியின் இந்த மனிதாபிமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கணவர், குறித்த மருத்துவச் சேவைகளை இலவசமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வரும் இத்தம்பதியினரின் இந்த தீர்மானம், ஆடம்பரத் திருமணங்களுக்கு மத்தியில் மனிதநேயத்தை நிலைநிறுத்துகின்ற ஒரு முன்மாதிரிச் செயலாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.



Post a Comment

0 Comments