Ticker

10/recent/ticker-posts

இலங்கை வீரரை பாராட்டிய கௌதம் கம்பீர்!

 இந்தியா - இலங்கை இடையேயான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில்,''டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை மிகவும் முக்கியம். இவை அனைத்தையும் இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார்.'' என்று பதிவிட்டுள்ளார். 

அண்மையில் நிறைவடைந்த, இந்தியா - இலங்கை இடையேயான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ, இந்திய அணித் தொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்பை தனது அபார ஆட்டத்தின் மூலமாக தடுத்து நிறுத்தினார்.

இந்தியாவுக்கெதிரான முதல் டெஸ்ட்டில் 100 மற்றும் 84 ஓட்டங்கள் குவித்த சொனல் தினுஷ, இரண்டாவது டெஸ்ட்டில் 103 & 133 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments