ICC யின் சமீபத்திய T20 சர்வதேச துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் தலைவர் சிரேயாஸ் ஐயர் 03 இடங்கள் முன்னேறி, தரவரிசையில் 04 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தற்போதைய ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் அதிரடியான தொடக்கத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இவ்வாறு சிரேயாஸ் ஐயர் தர வரிசையில் முன்னிலை அடைந்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற தொடரின் முதவாவது போட்டியில், சிரேயாஸ் ஐயர் தனது முதல் T20 சர்வதேச சதத்தை விளாசினார். அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறியதன் மூலம், T20 சர்வதேச துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் 04 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐயர், இஷான் கிஷன் (முதல் இடம்) மற்றும் அபிஷேக் சர்மா (02 வது இடம்) ஆகியோருடன் முதல் 04 இடங்களுக்குள் இணைந்துள்ளார். பாகிஸ்தான் அணி தலைவர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 03 வது இடத்தில் உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி தலைவர் தனது வாழ்நாள் சிறந்த தரவரிசையை எட்டியுள்ளதாக ICC தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, T20 சர்வதேச துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், குசல் மெண்டிஸ் 03 இடங்கள் முன்னேறி 23 வது இடத்தையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 13 இடங்களுக்கு முன்னேறி, மற்ற வீரர்களுடன் இணைந்து 24-வது இடத்தையும் மற்றும் சஞ்சு சாம்சன் 04 இடங்கள் முன்னேறி, மற்ற வீரர்களுடன் இணைந்து 27-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

0 Comments