Ticker

10/recent/ticker-posts

17,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நேர்காணல்கள் - பிரதமர் வெளியிட்ட தகவல்.

17,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நேர்காணல்கள் நவம்பர் 20 ஆம் திகதி அன்று ஆரம்பமாகுமென்று என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (18) பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கலந்துகொண்ட உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், அடுத்த வருடம் 02 ஆம் மற்றும் 06 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு முதலாம் தரத்திற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த 02 ஆண்டுகளில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் புதிய கல்வி முறையொன்றை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

Exam நோக்கிலான மாணவர்களை உருவாக்குவதற்கு பதிலாக, எதிர்கால சவால்களை வெற்றிகரமாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளக்கூடியதொரு சந்ததியினரை வளர்ப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமென்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், பல்கலைக்கழக முறைமைக்குள் 2,000 கல்விசார் பணியாளர்களை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் கல்வி முறைமைக்குள் சுமார் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தவிர, பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படுமென்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments