Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு. ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

 உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பினால் இன்று (26) இலங்கையிலும் தங்கத்தின் விலை 12,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் முதன் முறையாக 01 அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5,000 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.

இதன்படி இன்று காலை இலங்கை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,900 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கமைய கடந்த வௌ்ளிக்கிழமை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 385,000 ரூபாயாகவும் 22 கரட் 01 பவுன் தங்கத்தின் விலை 356,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments