இந்திய திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (12) காலமானார்.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி ஆஷா போஸ்லேவுக்கு, நேற்று இரவு 7.30 PM மணியளவில் திடீரென மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப் பட்டு வந்தார் .
08 தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இசையுலகில் கோலோச்சி வந்த ஆஷா போஸ்லே, பத்ம விபூஷன் மற்றும் தாதாசாஹேப் பால்கே விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
'சுரா லியா ஹை', 'தில் சீஸ் க்யா ஹை' போன்ற ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர். தமிழிலும் ‘செண்பகமே’, ‘செப்டம்பர் மாதம்’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

0 Comments