ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் வாக்குறுதியளித்தது. ஆனால், அவர்கள் அதனை செய்யத் தெரிந்தே தவறி விட்டனர்.
இது உலகம் முழுவதுமுள்ள பல மக்களுக்கும் நாடுகளுக்கும் கவலையையும், இடப் பெயர்ச்சி மற்றும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுடைய கடற்படை முழுவதும், மற்றும் அவர்களின் பெரும்பாலான "கண்ணிவெடி வீசும் கப்பல்கள்" முற்றிலுமாக தகர்க்கப்பட்ட போதிலும், அவர்கள் தண்ணீரில் கண்ணிவெடிகளைப் போட்டதாகக் தெரிவிக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம், ஆனால், எந்தக் கப்பலின் உரிமையாளர் அந்த ஆபத்தை ஏற்க விரும்புவார்?
ஈரான் நாட்டின் நற்பெயருக்கும், அவர்களின் "தலைவர்களில்" எஞ்சியிருப்பவர்களுக்கும் பெரும் அவமானமும் நிரந்தர பாதிப்பும் ஏற்பட்டுள்ளது, ஆனால், நாம் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம். அவர்கள் வாக்குறுதியளித்தபடி, இச்சர்வதேச நீர்வழியைத் திறக்கும் செயன் முறையை அவர்கள் விரைவாகத் தொடங்க வேண்டும்! சட்டப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு சட்டத்தையும் அவர்கள் மீறுகிறார்கள்.
ஈரான் தனது அணுசக்தி இலட்சியங்களைக் கைவிடத் தயாராக இல்லை . ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments