Ticker

10/recent/ticker-posts

பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் நியமனம்.

 பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) புதிய தலைவராக குறித்த அணியின் முன்னாள் தலைவரான தமீம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். 

பங்களாதேஷ் அரசாங்கத்தினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அமினுல் இஸ்லாம் தலைமையில் இயங்கிய நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டதையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

37 வயதான தமீம் இக்பால், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் வரலாற்றில் நியமிக்கப்பட்ட மிகவும் இளைய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் 11 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால குழுவிற்குத் தலைமை தாங்குவார். கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தேர்தலில் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட 05 பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments