ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
மேலும், 02 வார காலத்துக்கு ஹர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளார்.
அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு ஈரான் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.
அடுத்த 02 வார காலத்திற்கு ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இது ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்புச் சபையின் சார்பாக குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments