Ticker

10/recent/ticker-posts

இரு வார போர்நிறுத்தம் ஹிஸ்புல்லாவுடனான மோதலை உள்ளடக்கவில்லை - இஸ்ரேல்

 ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை 02 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் ட்ரம்பின் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் ஆனால், லெபனானில் ஹிஸ்புல்லாவுடனான போரை அது உள்ளடக்கவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஈரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையை திறந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தினால் மாத்திரமே இப்போர் நிறுத்தம் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் இனி அணு அல்லது ஏவுகணை தொடர்பில் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகளையும் இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments