ஹோட்டல் ஒன்றில் கொத்து வாங்கி விட்டு 5,000 ரூபாய் நோட்டை கொடுத்தால் கடைக்காரர் 1,000 ரூபாய் இல்லையா மல்லி?” என்று கேட்பதும், மருந்தகத்துக்கு போனால் 50 ரூபாய் மீதம் இருக்கிறது என்று அந்த பணத்துக்குப் பதிலாக பனடோல் காட்டை கொடுப்பதும் நமக்கு பழக்கமான ஒன்று.
ஆனால், இதுக்கெல்லாம் இப்போது நல்ல தீர்வு கிட்டியிருக்கிறது. அதுதான் உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட National QR Payment Adoption Program (LankaQR)! சிஸ்டம் ஆகும்.
இதனால் நமக்கும், கடைக்காரருக்குமிடையே என்ன பயன்? சிறிய வியாபாரிகளுக்கு இப்போது எந்தவொரு இழப்பும் இருக்காது.
5,000 ரூபாய்க்கு குறைவான எந்த Lanka QR பரிவர்த்தனைக்கும் வங்கிகள் வசூலித்த Merchant Discount Rate (MDR) கட்டணத்தை அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளது.
அதாவது வீதியோர சிறிய கடைக்கும் கூட எவ்வித நட்டமும் இல்லாமல் QR payment பயன்படுத்த முடியும். உரிய கட்டணத்துக்கு மேல் 01 சதமும் செலுத்த வேண்டியது கிடையாது. 01 ரூபாயும் வீணாகாது.
உதாரணத்துக்கு நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் 1,482 ரூபாய் பொருட்கள் வாங்கினீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
மீதிப் பணத்துக்காக காத்திருக்க தேவையில்லை. போனில் QR code ஸ்கேன் செய்து சரியாக 1,482 ரூபாய் செலுத்தலாம். காரணம் இது அத்தனை இலகுவானதாகும்.
இதில் நாட்டுக்கே பாரியளவு நன்மை உண்டு. சில்லறை தேடுவது, பணப்பையை நிரப்பி கொண்டு சுமந்து செல்லுவதெல்லாம் இப்போது தேவையில்லை.
புறக்கோட்டைக்கு சென்றால் பணம் தொலைந்து போகும் என்ற அச்சமும் இல்லை. எல்லா கொடுக்கல் வாங்கலுக்கும் டிஜிட்டல் ரசீது (Reciept) பெற்று கொள்ளலாம். அதே போன்று பணத்தை அச்சடிக்க வேண்டிய அரசின் பெரிய செலவும் பன்மடங்கு குறையும்.
ஏன் சிங்கப்பூரின் தெருக்கடைகள் முதல் தாய்லாந்தின் நைட் மார்க்கெட்ஸ்களுக்கு (Market) மக்கள் இப்போது பணம் கையில் எடுத்து செலுத்துவது அரிதாகி விட்டது.
எல்லோரும் QR scan செய்து பணம் செலுத்துகின்றனர். உலகம் இவ்வளவு வேகமாக முன்னேறும் போது நாம் மாத்திரம் இன்னும் பழைய முறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?
ஒரு டிஜிட்டல் இலங்கையை உருவாக்க வேண்டுமெனில் இம்மாற்றத்தை நாமே தொடங்க வேண்டும். இன்று முதல் உங்கள் வங்கி app-இல் காணப்படும் QR scanner-ஐ பயன்படுத்துங்கள்.
கடைக்கு போகும் போது “QR இருக்கா?” என்று கேட்க பழகுங்கள். அப்படிச் செய்தால் கடைக்காரர்களும் இதனை பயன்படுத்தத் தொடங்குவார்கள். எது எப்படியோ நமக்கு மாற்றம் வேண்டுமென்றால், முதலில் நாமே மாற வேண்டும்.

0 Comments