தேர்தலில் TVK பெரும்பான்மை வெற்றிக்கு இன்னும் 118 இடங்கள் தேவை. அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்ற முக்கிய ஆலோசனை TVK தலைவர் விஜய் தலைமையில் நடை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 2026 ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 00 AM மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் TVK 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட 02 தொகுதிகளிலும் முன்னிலையிலுள்ளார். பிற்பகலுக்குப் பின்னர் தொகுதிகளின் வெற்றி நிலவரம் தெரிய வந்துவிடும்.

0 Comments