இளம் தலைமுறையை திறமையானதும் சமூகப் பொறுப்புணர்வு மிக்கதுமான ஊடகவியலாளர்களாக உருவாக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) ஆறு மாத கால “புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சித் திட்டத்தை” அறிவித்துள்ளது.



நாடு தழுவிய ரீதியில் மொத்தம் 50 பேர் மட்டுமே இத்திட்டத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இருவர் வீதம் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். நேரடி மற்றும் இணையவழி வகுப்புகள் மூலம் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சித் திட்டத்தில், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் வழிகாட்டவுள்ளனர்.

அடிப்படை அறிக்கையிடல், புலனாய்வு ஊடகவியல், ஊடக நெறிமுறைகள், டிஜிட்டல் ஊடகம், வீடியோகிராபி, மொபைல் ஊடகவியல் (MoJo), தரவு ஊடகவியல், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, ஊடகச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பயிற்சியின் கீழ் கற்பிக்கப்படவுள்ளன.

18 முதல் 22 வயதுக்குட்பட்ட, உயர்தரப் பரீட்சை அல்லது அதற்கு இணையான கல்வித் தகைமையுடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். எழுத்தாற்றல், நடுநிலைமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயவிபரம் (CV), நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கூகுள் படிவத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு பிரதான பயிற்றுவிப்பாளர் ஷிஹார் அனீஸை 077 376 3577 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள முடியும்.

Google Form: https://forms.gle/zt5WZiLdm5w2W4vq8

E-mail: shiharaneez@gmail.com