Ticker

10/recent/ticker-posts

நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்

 தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியராகவும் வசன கர்த்தாவாகவும் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 வது வயதில் காலமானார்.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி நடித்த அவர், குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்தார்.

அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments