Ticker

10/recent/ticker-posts

எலும்பு முறிவை சில நிமிடங்களில் சரிசெய்யும் பசை கண்டுப்பிடிப்பு

 தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் எலும்புகள் சரி ஆவதற்கு சில மாதங்கள் எடுக்கின்றன. அதுவரை பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.




இந்நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 03 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையினை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.



'Bone-02' என அழைக்கப்படும் குறித்த பசை, இரத்தம் இருந்தால் கூட, 3 நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் குறித்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments