Ticker

6/recent/ticker-posts

03 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்.

இந்தியா - கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நகரில் 03 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள பதனகுப்பேவை என்ற பிரதேசத்தை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவருடைய மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் 03 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அவர் நேற்று முன் தினம் (6) காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றுள்ளனர். எனினும், குறித்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமது ஒரே மகளை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்ததோடு, வெறும் 08 வயதே ஆன‌ மாணவி தேஜஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்தமையானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments