Ticker

10/recent/ticker-posts

இனிமேல் ஸ்டேடஸ்களிலும் பாடல் சேர்கலாம். உற்சாகத்தில் வாட்ஸ்அப் பயனர்கள்.

Whatsapp இல் ஸ்டேட்டஸ் பதிவேற்றும்போது, பாடலோ இசையோ சேர்த்து பதிவேற்றும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Whatsapp இன் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய அம்சத்தால், பயனர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் இதனை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை, மெட்டாவின் மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமில் மட்டுமே பாடல் சேர்க்கும் அம்சம் காணப்பட்டது.



ஆனால், Instagramஇல் நாம் பாடல் சேர்த்து எடிட் செய்யும் விடியோவை பதிவிறக்கம் செய்தால், இசையின்றியே பதிவிறக்கமாவது போல் இருந்தது. இசையுடன் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால், 03 ஆம் நிலை செயலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.



இதனால், இன்ஸ்டாவில் எடிட் செய்து பதிவிறக்கம் செய்யும் விடியோவை வாட்ஸ் ஆப்பில் பகிர்வதில் சிறிய சிரமம் இருந்ததாக வாட்ஸ்ஆப் பயனர்கள் கூறி வந்தனர்.



இந்நிலையில், வாட்ஸ்ஆப்பிலும் இசை சேர்க்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அளவில்லாத ஆனந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். புகைப்படங்களில் 15 நொடிகள் இசையுடனும், விடியோக்களில் 60 நொடிகள் இசையுடனும் சேர்க்கும் வகையில் இப்புதிய அம்சம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments