Ticker

6/recent/ticker-posts

அக்கறைப்பற்று பிரதேச சபையும், மாநகர சபையும் யாருடைய வசம்?

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபையில் 12 வட்டாரங்களில் தேசிய காங்கிரஸ் 11 வட்டாரங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 வட்டாரத்தையும் வென்றுள்ளது. 



அதே போன்று பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 03 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 02 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனத்தையும், சுயேட்சைக் குழு 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.




தேசிய காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 வேட்பாளர்களில் அக்கரைப்பற்று புதுப்பள்ளி வட்டார வேட்பாளர் ஏ.எஸ்.ஏ. பாசித் 845 வாக்குகளை பெற்று முதன்மை வகிக்கின்றார்.



அக்கரைப்பற்று பிரதேச சபையில் 05 வட்டாரங்களில் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பட்டியலில் தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயேற்சைக் குழு என்பன தலா 01 ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன.



இரண்டு சபைகளிலும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கூடுதலான வட்டாரங்களையும், உறுப்பினர்களையும் பெற்றுள்ளமையினால் 02 சபைகளிலும் தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 02 முறைகள் இரு சபைகளினதும் ஆட்சியை தேசிய காங்கிரஸே கைப்பற்றி ஆட்சி செய்தது.



Post a Comment

0 Comments