2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் இரண்டாம் வினாப்பத்திரம் 9.30 AM - 10.45 மணி வரையிலும், முதலாம் வினாப்பத்திரம் 11.15 AM - 12.15 PM மணி வரையிலும் நடைபெறும்.
மேற்படி பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்புகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments